காமன்வெல்த் உறுப்பு நாடுகள்
'காமன்வெல்த்' (Commonwealth) என்பது 54 சுதந்திர, இறையாண்மை வாய்ந்த நாடுகளைக் கொண்ட ஒரு தன்னார்வ கூட்டமைப்பாகும். காமன்வெல்த் முதன் முதலில் 1931-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அப்போது அது 'பிரிட்டிஷ் காமன்வெல்த்' என அழைக்கப்பட்டது. இங்கிலாந்து, கனடா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, the Irish Free State, Dominion of New Foundland ஆகியவை முதல் உறுப்பு நாடுகளாகும். 1949-ஆம் ஆண்டு செய்யப்பட்ட இலண்டன் பிரகடனத்தின்கீழ் புதிய காமன்வெல்த் கூட்டமைப்பு நிறுவப்பட்டது. காமன்வெல்த் உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவை முன்னாள் பிரிட்டிஷ் பேரரசின் காலனிகள் (குடியேற்ற நாடுகள்) அல்லது அவற்றின் சார்பு நாடுகளாகும் (dependencies). இரண்டாவது எலிசபெத் அரசியார் இந்தக் கூட்டமைப்பின் தலைவராவார். இதன் தலைமையகம் இலண்டனில் அமைந்துள்ளது. பல்வேறு அரசியல், பொருளாதார, சமூகப் பின்புலன்களையுடைய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தக் கூட்டமைப்பு, சிங்கப்பூர் காமன்வெல்த் பிரகடனத்தில் (1971)குறிப்பிடப்பட்டுள்ள மக்களாட்சி மலர ஊக்குவித்தல், மனித உரிமைகளைப் பேணுதல், சட்டநீதி, தடையிலா வாணிகம், நல்லாட்சி, தனிமனித உரிமை, பன்னாட்டு உறவுகள், உலக அமைதி ஆகிய விழுமங்கள் மற்றும் நோக்கங்கள் அடிப்படையில் தனது செயல்திட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தி வருகிறது.
உறுப்பு நாடுகளில் மூன்று ஐரோப்பாவிலும், 13 வட, தென் அமெரிக்கா, கரீபியன் பகுதியிலும், 19 ஆப்பிரிக்காவிலும், எட்டு ஆசியாவிலும், 11 ஓசானியாவிலும் உள்ளன. இவற்றில் 16 நாடுகள் எலிசபெத் அரசியாரைத் தங்கள் நாட்டின் தலைவராகக் கொண்டுள்ளன. ஐந்து நாடுகள் முடியாட்சி (மன்னராட்சி) நாடுகள் (புருணை, லெசோதோ, மலேசியா, சுவாஸிலண்ட்); மற்றவை குடியரசுகள். உலகின் பெரிய நாடுகளில் சிலவும், சிறிய, செல்வமிக்க, ஏழ்மை நாடுகளும் காமளவெல்த் கூட்டமைப்பில் உறுப்பியம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த ஏறத்தாழ 2 பில்லியன் குடிமக்கள் வாழ்கின்றனர். அவர்களுள் 50 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் 25 வயதினர் அல்லது அதற்கும் குறைவான வயதினர்.
காமன்வெல்த் உறுப்பு நாடுகளையும் அவை உறுப்பியம் பெற்ற நாளையும் கீழ்க்கண்டப் பட்டியலில் காணலாம்.
நாடு
உறுப்பியம் பெற்ற நாள்
கண்டம்
அன்டிகுவா & பார்பியூடா
1 நவம்பர் 1981
வட அமெரிக்கா
ஆஸ்திரேலியா 11 டிசம்பர் 1931 ஓசானியா பகாமாஸ்
10 ஜூலை 1973 வட அமெரிக்கா பங்களாதேஷ்
18 ஏப்ரல் 1972 ஆசியா பார்பேடாஸ் 30 நவம்பர் 1966 வட அமெரிக்கா பெலீஸ் 21 செப்டம்பர் 1981 வட அமெரிக்கா போட்சுவானா 30 செப்டம்பர் 1966 ஆப்பிரிக்கா புருணை 1 ஜனவரி 1984 ஆசியா கமரூன் 13 நவம்பர் 1995 ஆப்பிரிக்கா கனடா 11 டிசம்பர் 1931 வட அமெரிக்கா சைப்ரஸ் 13 மார்ச் 1961 ஐரோப்பா டோமினிக்கா 3 நவம்பர் 1978 வட அமெரிக்கா பிஜி (Fiji) 10 அக்டோபர் 1970 (2006-ஆம் ஆண்டு பிஜியில் நடந்த இராணுவப் புரட்சி காரணமாக அதே ஆண்டு இந்நாடு இடைநீக்கம் செய்யப்பட்டது) ஓசானியா காம்பியா 18 பிப்ரவரி 1965 ஆப்பிரிக்கா கானா 6 மார்ச் 1957 ஆப்பிரிக்கா கிரெனேடா 7 பிப்ரவரி 1974 வட அமெரிக்கா கயானா 26 மே 1966 தென் அமெரிக்கா இந்தியா 15 ஆகஸ்ட் 1947 ஆசியா ஜமெய்க்கா 6 ஆகஸ்ட் 1962 வட அமெரிக்கா கென்யா 12 டிசம்பர் 1963 ஆப்பிரிக்கா கிரிபாஸ் 12 ஜூலை 1979 ஓசானியா லெசோத்தோ 4 அக்டோபர் 1966 ஆப்பிரிக்கா மலாவி 6 ஜூலை 1964 ஆப்பிரிக்கா மலேசியா 31 ஆகஸ்ட் 1957 ஆசியா
மால்டிவ்ஸ் |
9 ஜூலை 1982 | ஆசியா |
மால்ட்டா | 21 செப்டம்பர் 1964 | ஐரோப்பா |
மொரிஷியஸ் | 12 மார்ச் 1968 | ஆப்பிரிக்கா |
மொஸாம்பிக் | 13 நவம்பர் 1995 | ஆப்பிரிக்கா |
நமிபியா | 21 மார்ச் 1990 | ஆப்பிரிக்கா |
நவூரு | 1 நவம்பர் 1968 | ஆப்பிரிக்கா |
நியூஸிலாந்து | 11 டிசம்பர் 1931 | ஓசானியா |
நைஜீரியா | 1 அக்டோபர் 1960 | ஆப்பிரிக்கா |
பாக்கிஸ்தான் | 15 ஆகஸ்ட் 1947 | ஆசியா |
பாப்யூவா நியூகினி | 16 செப்டம்பர் 1975 | ஓசானியா |
ருவண்டா | 29 நஙவம்பர் 2009 | ஆப்பிரிக்கா |
செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் | 19 செப்டம்பர் 1983 | வட அமெரிக்கா |
செயின்ட் லூசியா | 22 பிப்ரவரி 1979 | வட அமெரிக்கா |
செயின்ட் வின்சென்ட் & கிரனடின்ஸ் | 27 அக்கடோபர் 1979 | வட அமெரிக்கா |
சமோவா | 28 ஆகஸ்ட் 1970 | வட அமெரிக்கா |
சேஷெல்ஸ் | 29 ஜூன் 1970 | ஆப்பிரிக்கா |
சியாரா லியோன் | 27 ஏப்ரல் 1961 | ஆப்பிரிக்கா |
சிங்கப்பூர் | 9 ஆகஸ்ட் 1966 | ஆசியா |
சாலமன் தீவுகள் | 7 ஜூலை 1978 | ஓசானியா |
தென் ஆப்பிரிக்கா | 11 டிசம்பர் 1931 | ஆப்பிரிக்கா |
ஸ்ரீலங்கா | 4 பிப்ரவரி 1948 | ஆசியா |
சுவாஸிலாந்து | 6 செப்டம்பர் 1968 | ஆப்பிரிக்கா |
டான்ஜெனியா | 26 ஏப்ரல் 1964 | ஆப்பிரிக்கா |
டோங்கா | 4 ஜூன் 1970 | ஓசானியா |
டிரினிடாட் & டொபேகோ | 31 ஆகஸ்ட் 1962 | தென் அமெரிக்கா |
துவாலு | 1 அக்டோபர் 1978 | ஓசானியா |
உகாண்டா | 9 அக்டோபர் 1962 | ஆப்பிரிக்கா |
இங்கிலாந்து | 11 டிசம்பர் 1931 | ஐரோப்பா |
வனுவாட்டு | 30 ஜூலை 1980 | ஓசானியா |
ஸாம்பியா | 24 அக்டோபர் 1964 | ஆப்பிரிக்கா |
ஆதாரம்: www.royal.gov.uk ; https://en.wikipedia.org