உலகளாவிய இணையப் பயன்பாடு

 'இன்டெர்நெட்' எனப்படும் இணையத்தின் வரவு  நம் அன்றாட வாழ்க்கையில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. விரல் நுனியில் தகவல்கள், செய்திகள், புள்ளிவிவரங்கள்; விரல் சொடுக்கும் நேரத்தில் தகவல், செய்திப் பரிமாற்றம், தரவிறக்கம்: பதிவேற்றம்; பூமிக் கோளத்தில் நாடுகளின் எல்லைகள் மறைந்துபோய் 'எல்லையில்லா உலக' உருவாக்கம்; தொலைவு என்பது மறைந்து போய், உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிப்போன அதிசயம்!

இணையத்தின் உலகளாவிய பயன்பாடு குறித்த புள்ளிவிவரங்களைக் கீழே காணலாம். 'உலக இணையப் புள்ளிவிவரங்கள்' ( internetworldstats.com) எனும்  வலைத்தளத்தின் கணிப்புப்படி, உலகில் ஏறக்குறைய  2.4 பில்லியன் (1 பில்லியன் = 1,000 மில்லியன்) இணையப் பயனர்கள் (internet users) உள்ளனர்.  கண்ட / பிரதேச அடிப்படையில் இணையப் பயனர் விகிதாச்சாரம்  வருமாறு: ஆசியா: 44.8%; ஐரோப்பா: 21.5%; வட அமெரிக்கா: 11.4%; இலத்தீன் அமெரிக்கா/ கரீபியன்: 10.4%; ஆப்பிரிக்கா: 7.0%; மத்திய கிழக்கு; 3.7%; ஓசானியா/ஆஸ்திரேலியா: 1.0%.

20 முதன்மை நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கை 1.7 பில்லியன் (உலகப் பயனர்களில் 71 விழுக்காட்டினர்)  ஆகும். சீனா, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பிரேசில், ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், நைஜீரியா ஆகிய நாடுகள் இணையத்தை அதிகமாகப்  பயன்படுத்தும் 10 முதன்மை உலக நாடுகளாகும்.

பிரதேச /மண்டல வாரியான இணையப் பயனர் புள்ளிவிவரம்*

பிரதேசம்

மக்கள்தொகை

இணையப் பயனர்

பயனர் ஈர்ப்பு விழுக்காடு (%)

முகநூல் (Faceook)  பயனர்

ஆசியா

3,922,066,987

1.076,681,059 27.5% 254,336,520

ஐரோப்பா

   820,918,446

   518,512,109   63.2% 250,934,000

வட அமெரிக்கா

   348,280,154    273,785,413   78.6% 184,177,220

இலத்தீன் அமெரிக்கா / கரீபியன்

   593,688,638    254,915,745   42.9% 188,339,620

ஆப்பிரிக்கா

1,073,380,925

   167,335,676    15.6%    51,612,460

மத்தியகிழக்கு

   223,608,203       90,000,455     40.2%     23,811,620

ஓசானியா /ஆஸ்திரேலியா

     35,903,569      24,287,919  67.6     14,614,780

      *2012-ஆம் ஆண்டு மதிப்பீடு

   ஆதாரம்: Internet World Stats - www.internetworldstats.com

  

உயர்ந்த எண்ணிக்கையுடைய இணையப் பயனர்களைக் கொண்ட 20 முதன்மை நாடுகள் பட்டியல்*

 நாடு

மக்கள்தொகை

பயனர்கள்

மக்கள்தொகையில் பயனர் விழுக்காடு

உலகப் பயனர் விகிதாச்சாரம்

1. சீனா

1,343,239,923 538,000,000   40.1% 22.4%
2. அமெரிக்கா    313,847,465 245,203,319     78.1% 10.2%
3. இந்தியா 1,205,073,612 137,000,000     11.4%   5.7%
4.  ஜப்பான்

   127,368,088

101,228,736      79.5%   4.2%
5.  பிரெசில்    193,946,886    88,494,756      45.6%    3.7%
6.  ரஷ்யா    142,517,670    67,982,547      47.7%    2.8%
7.  ஜெர்மனி      81,305,856    67,483,860   83.0    2.8%
8.  இந்தோனேசியா    248,645,008    55,000,000      22.1%    2.3%
9.  இங்கிலாந்து       63,047,162    52,731,209      83.6%    2.2%
10. ஃபிரான்ஸ்       65,630,692    52,228,905     79.6%    2.2%
11. நைஜீரியா    170,123,740    48,366,179      28.4%    2.0%
12. மெக்சிகோ    114,975,406    42,000,000      36.5%    1.7%
13. ஈரான்      78,868,711    42,000,000      53.3%    1.7%
14. தென் கொரியா     48,860,500    40,329,660      82.5%    1.7%
15. துருக்கி     79,749,461    36,455,000      45.7%    1.5%
16. இத்தாலி     61,261,254    35,800,000      58.4%    1.5%
17. பிலிப்பீன்ஸ்    103,775,002    33,600,000      32.4%    1.4%
18. ஸ்பெயின்      47,042,984    31,606,233      67.2%    1.3%
19. வியட்னாம்      91,519,289    31,034,900      33.9%    1.3%
20. எகிப்து      83,688,164    29,809,724      35.6%    1.2%

                     * 2012 -ஆம் ஆண்டு மதிப்பீடு

                     ஆதாரம்: www.internetworldstats.com

                   

     அதிக எண்ணிக்கையுடைய  இணையப் பயனர்களைக் கொண்ட 10 முதன்மை ஆசிய நாடுகள் பட்டியல்*

நாடு

மக்கள்தொகை பயனர் எண்ணிக்கை ஆசியப் பயனர் விழுக்காடு முகநூல் (Facebook)
1. சீனா 1,343,239,923 538,000,000 50.0% 633,300
2. இந்தியா

 1,205,073,612

137,000,000

11.4%

62,713,680

3. ஜப்பான்

   127,368,088

101,228,736    9.4% 17,196,080
4. இந்தோனேசியா    248,645,008   55,000,000    5.1% 51,096,860
5. தென் கொரியா     48,860,500   40,329,660    3.7% 10,012,400
6. ஃபிலிப்பீன்ஸ்    103,775,002   33,600,000    3.1% 29,890,900
7. பாக்கிஸ்தான்    190,291,129   29,128,970     2.7%   7,984,880
8. தாய்லந்து      67,091,089   20,100,000     1.9% 17,721,480
9. மலேசியா      29,179,952   17,723,000     1.6% 13,589,520
10.தாய்வான்      23,234,936   17,530,000     1.6% 13,240,660

             * 2012 -ஆம் ஆண்டு மதிப்பீடு

                     ஆதாரம்: www.internetworldstats.com