தனித்தமிழ் எழுதவேண்டுமா?

செம்மொழியாம் தமிழில் பிறமொழிச் சொற்கள் மிகுந்து காணப்படுகின்றன. அவற்றை நாம் அறியாமல், உணராமல் தமிழெனக் கருதி நமது ஆக்கங்களில் / படைப்புகளில் / உரையாடல்களில்  பெருவாரியாகப் பயன்படுத்தி வருகின்றோம். சங்கக் காலந்தொட்டு இருபத்தோராம் நூற்றாண்டுவரை தமிழில்  சமஸ்கிருத / வடமொழி மற்றும் ஆங்கிலச் சொற்கள் கலப்பு இருந்து வருவதை மறுப்பதற்கில்லை. இந்த மொழிக் கலப்பை முடிந்த வரையில் தவிர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

பிறமொழிச் சொற்களின் கலப்பின்றி மரபுசார் இலக்கண நெறிகளுக்கு இணங்கப் பேசப்படும் எழுதப்படும் தமிழ் மொழியைத் தனித்தமிழ் எனலாம். தமிழில் பரவலாக விரவிக் கிடக்கும் பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து எழுதுவது செம்மொழிக்கு வளம் சேர்க்கும் என்பதில் மாறுபாடான கருத்துகள் இருக்க முடியாது.  காலங்காலமாகத் தமிழ்கூறு நல்லுலகின் இன்றியமையாத் தேவைகளையும் செம்மொழியை மாண்புறச் செய்யும் வியூகங்களையும் பணிகளையும் புறக்கணித்து,  நீண்டத் துயில் கொண்டிருக்கும் பல்வேறு அறிவுத் துறைகள் சார்ந்த  தமிழறிஞர்கள் ஒன்றுகூடித் தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களுக்கும்  சொற்றொடர்களுக்கும் இணையான தனித்தமிழ்ச் சொற்களையும் சொற்றொடர்களையும் மற்றும் ஆங்கிலம்,  மலாய் மொழிகளிலுள்ள பல்வேறு அறிவுத் துறைகள் சார்ந்த சொற்களுக்கான கலைச்சொற்களை உடனடியாக உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும்.

கலைச்சொல்லாக்கம் தமிழில் மிகக் குறைவே என்பதனை எவரும் மறுக்க முடியாது. இது பெரிதும் கவலைக்குரியதாகும்.  இக்குறைபாட்டினைப் போக்க,  தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களை அடையாளம் கண்டு அவற்றிற்கேற்ற, பொருத்தமான தனித்தமிழ்ச் சொற்களை உருவாக்குவதுடன், அவற்றை நாம் பேசும்பொழுதும்  எழுதும்பொழுதும் இலக்கண வழுவின்றிப் பயன்படுத்துவது தமிழின் செழுமைக்குச் சிறப்புக் கூட்டுவதாகும்.  அதே வேளையில்,  பிறமொழிச் சொற்களுக்கு நிகரானத்  தனித்தமிழ்ச் சொற்கள் இல்லாவிடில், பெரு வழக்காகிவிட்ட,  தனித்தமிழ் அல்லாத சொற்களைத் தனித்தமிழ் இயக்கத் தந்தை எனப் போற்றப்படுகின்ற மறைமலை அடிகள் கூறியதைப் போன்று, "இன்றியமையாத இடங்களில், தேவைக்கு ஏற்ப" பயன்படுத்துவதில் தவறில்லை. அவற்றின் பயன்பாட்டில் நாம் ஒரு தீவிரப் போக்கையும் நோக்கையும் கடைப்பிடிக்காமல், ஒரு நெகிழ்வான / நடுவழிக் கொள்கையைப் பின்பற்றுவது  அறிவுடைமையாகும் என்பது அடியேனின் தனிப்பட்டக் கருத்தாகும். வீம்புக்காகத் தனித்தமிழ் என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்டு கரடு முரடான, பொருள் விளங்காத, வழக்கற்றுப்போன, அருகி வரும் சொற்களைப் பயன்படுத்துவது செம்மொழித் தமிழைச் சீர்குலைப்பதற்கும் சிதைப்பதற்கும் ஒப்பாகும் என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ்ப் பெருமக்கள் இயன்றவரைத் தனித்தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும் என்பது 'தமிழ் இணையம் மலேசியா' வலைத்தளத்தின் விழைவாகும்.  தமிழ்க் கற்றோரைத் தனித்தமிழில் எழுத  ஊக்குவிக்கும் நோக்கில் தமிழில் கலந்துள்ள சில தெரிவு செய்யப்பட்ட வடமொழிச் சொற்களுக்கு நிகரானத் தனித்தமிழ்ச் சொற்கள் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தனித்தமிழ் ஆர்வலர்கள் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.

தமிழில் கலந்துள்ள வடமொழிச் சொற்களுக்கு இணையான தனித்தமிழ்ச் சொற்கள் பட்டியல்

வடமொழிச் சொல் தமிழ்ச் சொல்
சவால் அறைகூவல்
நகல் படி
மாமூல் வழக்கம்
சிபாரிசு பரிந்துரை
முகாம் பாசறை
உபயோகம் பயன்; பயன்பாடு
மனு விண்ணப்பம்
சங்கம் கழகம்
முடியாட்சி கோவரசு
சித்தாந்தம் கொண்முடிபு; கோட்பாடு; கருத்தியல்
பஞ்சாங்கம் ஐந்திரம்
சிங்கம் அரிமா
சிநேகம் நட்பு
சத்தியம் வாய்மை
சர்வம் எல்லாம்
அபிப்பிராயம் எண்ணம்; கருத்து
வியாதி நோய்
துரிதம் விரைவு; வேகம்
அகங்காரம் செருக்கு; சினம்
சாமர்த்தியம் திறமை
பிரபல பெயர்பெற்ற; புகழ்பெற்ற
சாந்தி அமைதி
தருமம் அறம்
உபவாசம் நோன்பு; உண்ணாநிலை

சூரியன்

கதிரவன்; ஞாயிறு

தரித்திரம்

வறுமை

சிலை

படிமம்

திருப்தி

மனநிறைவு

உபத்திரவம்

தொல்லை; இடைஞ்சல்

தூரம்

தொலைவு

தஞ்சம்

புகலிடம்; அடைக்கலம்

பிரதிநிதி

பேராளர்

ஆரம்பம்

தொடக்கம்

பகவான்

தெய்வம்; கடவுள்

தேகம்

யாக்கை; உடல்; உடம்பு
தேசபக்தி நாட்டுப்பற்று
தேகப்பயிற்சி உடற்பயிற்சி
தேசம் நாடு
தேசாபிமானம் நாட்டுப்பற்று
தேசியகீதம் நாட்டுப் பண்
கிலி மனக் கலக்கம்; பீதி

கரிசனம்

பரிவு; அக்கறை

தாத்பரியம்

நோக்கம்; பொருள்; குறிக்கோள்

தாமதம் சுணக்கம்
எதேச்சையாக தற்செயலாக
கீர்த்தி புகழ்
கச்சேரி இசையரங்கம்
துரோகம் இரண்டகம்
பாத்திரம் ஏனம்

விபச்சாரி

விலைமகள்; வரைவின் மகளிர்
கிரகம் கோள்
பிரயாணம் பயணம்
சந்ததி தலைமுறை
பகிரங்கம் வெளிப்படை
பிரசவம் மகப்பேறு
விரதம் நோன்பு; உண்ணா நிலை
வாசனை மணம்
விவசாயம் வேளாண்மை; உழவுத்தொழில்
வேதம் மறை
மயானம் இடுகாடு
யாகம் வேள்வி
புண்ணியம் அறப்பயன்
வாகனம் ஊர்தி
நட்சத்திரம் விண்மீன்
விஞ்ஞானம் அறிவியல்
அநேகம் பல
ஆச்சரியம் வியப்பு
சந்திப்பு கூடல்
கிருகப் பிரவேசம் புதுமனைப் புகுதல்
கிருகப் பிரவேச விழா புதுமனைப் புகு விழா
வாடிக்கை வழக்கம்
சாவி திறவுகோல்
நீர்வீழ்ச்சி அருவி
தீபம் விளக்கு; ஒளி
சமுத்திரம் பெருங்கடல்
தீர்க்காயுசு நீண்ட ஆயுள்
ஆனந்தம் மகிழ்ச்சி; பேரின்பம்
ஆராதனை வழிபாடு
சந்தேகம் ஐயம்
சுபாவம் இயல்பு
சதுரம் நாற்கோணம்
கிரியை செய்கை
ஞானம் அறிவு
அதிகரித்துள்ளது உயர்ந்துள்ளது
பத்திரிகை செய்தித்தாள்; தாளிகை
அனுபவம் பட்டறிவு
இலாபம் ஆதாயம்
ஏகாதிபத்தியம் ஒற்றையாட்சி
பரிச்சயம் பழக்கம்; அறிமுகம்
சன்மார்க்கம் நல்வழி
சங்கநாதம் முழக்கம்; அறைகூவல்
சங்கல்பம் / சங்கற்பம் தீர்மானம்; முடிவு; மன உறுதி
நியமித்தல் அமர்த்துதல்
வர்த்தகம் வாணிகம்
ஏராளம் மிகுதி
அனாவசியம் தேவையின்மை
கெலிப்பு வெற்றி
தினம் நாள்
தினசரி நாளிதழ்; நாளேடு; அன்றாடம்
தைரியம் துணிவு; வீரம்; துணிச்சல்
தொந்தரவு தொல்லை
பிரதம முதன்மை; முக்கிய; தலைமை
பிரதானம் முதன்மை; முக்கியம்
பிரதாபம் பெரும் சாதனை; அளப்பு
பிரத்தியேக தனிப்பட்ட; சிறப்பான
பிரமிப்பு வியப்பு; மலைப்பு
பிரமாணம் உறுதிமொழி
பிராயச்சித்தம் பரிகாரம்
பிரவாகம் நீர்ப்பெருக்கு; வெள்ளம்
பிரார்த்தனை வழிபாடு
பிரேதம் பிணம்;சடலம்
பிரிவுபசாரம் வழியனுப்பும் விழா
பிரேரணை தீர்மானம்
நிம்மதி கவலையின்மை
துன்பம் இடுக்கண்; இன்னல்;
நீர் தண்ணீர்
சாந்தம் அடக்கம்; அமைதி
சிகரம் உச்சி; முகடு
சிரம் தலை
சிரமம் கடுமை; கடினம்
சுலபம் எளிது
சிசு குழந்தை; சேய்
சிகை தலைமுடி
சிங்காரம் ஒப்பனை; அழகு
இம்சை வேதனை; தொல்லை
இறுமாப்பு செருக்கு; கர்வம்
பலவீனம் தளர்ச்சி; குறைபாடு
சர்வம் எல்லாம்
புகார் முறையீடு
இரகசியம் மறைபொருள்; கமுக்கம்
நிரந்தரம் நிலையான
சாசுவதம் நிரந்தரம்
யதார்த்தம் உண்மை
சுவீகாரம் தத்து
சாத்தியமான இயலக்கூடிய
சிந்தனை எண்ணம்; கருத்து
சுயநலம் தன்னலம்
சுபிட்சம் செழிப்பு; வளமை
சூன்யம் வெறுமை;பாழ்;இன்மை
சுவாசம் மூச்சு
சுந்தரம் எழில்; அழகு
பங்கம் ஊறு; கேடு; தீங்கு
கோபம் சினம்
சதம் நூறு
அங்கலாய்ப்பு மனக்குறை
அகம்பாவம் திமிர்
அங்ககீனம் குடல் ஊனம்; உறுப்புக்குறை
ஆதங்கம் மனக்குறை
ஞாபகசக்தி நினைவாற்றல்
பந்துக்கள் உறவினர்கள்
விவாகம் திருமணம்
தியாகம் ஈகை
பரியந்தம் வரை
மத்தியானம் நண்பகல்
உலோபி கஞ்சன்
சிங்காசனம் அரியணை
சொளகரியம் வசதி
கிருபை அருள்
அவயவம் உறுப்பு
அந்தரங்கம் மறைமுகம்
சகுனம் குறி
சமாச்சாரம் செய்தி
மார்க்கம் வழி; சமயம்
விவாக ரத்து மணமுறிவு; மண விலக்கு
மோட்சம் வீட்டுபேறு
சொப்பனம் கனவு
சோகம் துயரம்
சேட்டை குறும்பு
சொகுசு பகட்டு
தயாளம் இரக்கம்
தனம் செல்வம்
தகனம் எரியூட்டல்
திரவம் நீர்மம்
திரவியம் செல்வம்

தானம்

கொடை
திராணி தெம்பு; வலிமை
திடம் திண்மை
சொற்பம் கொஞ்சம்
சவுபாக்கியம் நற்பேறு
ஆதி தொடக்கக் காலம்; முதல்
சரித்திரம் வரலாறு
சஞ்சலம் மனக்கலக்கம்; நடுக்கம்; நிம்மதியின்மை
சமீபம் அண்மை; அருகு
சமரசம் இணக்க முடிவு; அமைதி
சமர்ப்பணம் காணிக்கை
சர்ப்பம் பாம்பு
சர்ச்சை வாக்குவாதம்
பிராணவாயு உயிர்வளி
சாட்சி ஆதாரம்; சான்று
சச்சரவு கலகம்
சருமம் தோல்
ஆலயம் கோயில்
ஆரோக்கியம் நோயற்ற நிலை; நன்னிலை
இச்சகம் முகத்துதி
கோகிலம் குயில்
குசலம் நலம்
சம்பவம் நிகழ்வு
கோபம் சினம்
சதி வஞ்சக ஏற்பாடு; தீய மறைமுகத் திட்டம்
சகாயம் உதவி; ஆதரவு;  (விலை) மலிவு
சஞ்சாரம் நடமாட்டம்
சஞ்சிகை பத்திரிகை; இதழ்
சச்சரவு தகராறு
இரசாயனவியல் வேதியியல்
சதவிகிதம் விழுக்காடு
சதா விடாமல்; தொடர்ந்து / எப்போதும்
கோலாகலமாக சிறப்பாக; ஆடம்பரமாக
விசித்திரம் வினோதம்; புதிர்
விசுவாசம் நன்றியுணர்வு; மாறாதப் பற்று
வியாகூலம் கவலை
விரசம் ஆபாசம்; நயமற்ற தன்மை
விரகதாபம் காதல் ஏக்கம் / வேதனை
விமரிசையாக சிறப்பாக
விகாரம் கோரம்
சந்தர்ப்பம் வாய்ப்பு; சூழல்
சமாதி கல்லறை
சப்தம் ஒலி
சன்மானம் வெகுமதி
ஆலிங்கனம் கட்டித் தழுவுதல்
ஏகாந்தம் தனிமை
அதிர்ச்சி நடுக்கம்
இலட்சியம் குறிக்கோள்
உதாரணம் எடுத்துக்காட்டு; சான்று; மேற்கோள்
அட்டகாசம் கொடுமை; அட்டூழியம்; ஆர்ப்பாட்டம்
அசட்டை புறக்கணிப்பு; அலட்சியம்
அசத்து திணறடித்தல்; அயரச்செய்தல்
அசதி களைப்பு
அசம்பாவிதம் நடக்கக்கூடாதது
அசிங்கம் தரக்குறைவு;அழகற்ற; மட்டம்
அசிரத்தை ஆர்வமின்மை; அக்கறையின்மை
அசொளகரியம் வசதியின்மை; நலக்குறைவு; தொல்லை
அசொளக்கியம் (உடல்) நலமினமை; சுகவீனம்
அத்தியாவசியம்  (இன்றியமையாத) தேவை; அடிப்படையான
அத்தாட்சி சான்று
அதி மிக; மிகுதி
அவதூறு பழி;களங்கம்
அவமதி இழிவுபடுத்து
அவநம்பிக்கை நம்பிக்கையின்மை; ஐயம்
அவமானம் இழிநிலை
அவலம் வருந்தத்தக்க/ இரங்கத்தக்க நிலை
அவச்சொல் பழிச்சொல்
ஐக்கியம் ஒற்றுமை
கபளீகரம் பறிமுதல்
சுதந்திரம் தன்னுரிமை; விடுதலை
சுத்தம் தூய்மை
சேவை பணி
தாபம் வேட்கை
சீக்கிரமாக விரைவாக
சாவகாசம் விரைவின்மை; போதுமான நேரம்