அறிவியல் / தொழில்நுட்பம்
பதிப்பு 1
அன்றாட வாழ்வில் அறிவியல் ~ மாதங்கி
இந்த எழுத்தாளர் அறிவியல் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் புனைவதில்
வல்லவர்; ஆர்வமிக்கவர். திருநெல்வேலி மாவட்டைச் சேர்ந்த இவர், திருச்சியில்
கல்லூரி படிப்பிற்குப் பின்னர் பெங்களூரில் வங்கி அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
தமிழின் மீதுள்ள பற்று, ஆர்வம் காரணமாக தமிழில் முதுகலைப் படிப்பு பயின்றார்.
புலம்பெயர்ந்து 1993-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது முதல்
சிறுகதைத் தொகுப்பு 2004-ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. சிங்கப்பூர், மலேசிய, தமிழக
இதழ்களிலும் இணைய இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. அறிவியல்
கட்டுரைகள், செய்திகள் எழுதுவதில் தனிப்பட்ட ஆர்வம் இவருக்கு உண்டு. இவருடைய
''அறிவியல் கேள்வி - பதில் " பகுதி 'பெண்ணே நீ' மாத இதழில் ஒன்றரை ஆண்டுகள்
தொடர்ந்து வெளிவந்தது.
இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான 'ஒரு கோடி டாலர்கள்' 2012-ஆம்
ஆண்டு வெளிவந்தது.
2010 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'அமுதசுரபி' இதழில் வெளிவந்த 'ஓர் உன்னத தினம்'
என்னும் இவரது சிறுகதையை 'இலக்கிய சிந்தனை' எனும் அமைப்பு சிறந்த
கதையாகத் தேர்ந்தெடுத்தது. பல்வேறு சிறுகதை மற்றும் கவிதைப் போட்டிகளில் பரிசுப்
பெற்றிருக்கும் இவரது முதல் கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதை சிங்கப்பூர் தொடக்கக்
கல்லூரி மாணவர்களின் இணைப்பாட நூலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.