துணுக்குகள்

பதிப்பு 1

   ' பசுமைப் புரட்சி' என்பது வேளாண்மையை  மேம்படுத்தி,  எல்லா

      நாடுகளையும் உணவுத் தன்னிறைவைக் கொண்டவையாக

      உருவாக்குவதாகும்;  'இளஞ்சிவப்புப் புரட்சி' என்பது மருந்து

      வகைகள் உற்பத்தியைப் பெருக்குவதாகும்; 'நீலப் புரட்சி' என்பது

      மீன் உற்பத்தியைப் பெருக்குவதாகும்; 'வெண்மைப் புரட்சி' என்பது

      பால் உற்பத்தியைப்  பெருக்குவதைக் குறிப்பதாகும்; 'மஞ்சள் புரட்சி' 

         என்பது எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப் பெருக்குவதாகும்.

     அறிவியல் மேதை அல்பர்ட் ஐன்ஸ்டைன் மரணம் அடைந்தபோது,

    அவரது இறுதி வார்த்தைகள் அவரோடு மரித்தன. காரணம், அவர்

    பக்கத்தில் இருந்த தாதிக்கு, ஜெர்மன் மொழி தெரியவில்லை.

    தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம்

    பெல், தமது தாயாருடனும் மனைவியுடனும் ஒருபோதும்

    தொலைபேசியில் பேசியதில்லை. ஏனெனில், அவர்கள்

    இருவரும் காது கேளாதவர்கள்.

    இத்தாலியின் தேசியக் கொடியை வடிவமைப்புச் செய்தவர்

    நெப்போலியன் போனபார்ட்.

    கெட்டுப் போகாத ஒரே உணவு தேன் மட்டுமே.