வாழ்வை உயர்த்தும் சிந்தனைகள்

சுயக் கட்டுப்பாடு - ஜேம்ஸ் ஆலன் (ஆங்கித்தில்) கவிஞர் புவியரசு (தமிழில்)

   சுயக் கட்டுப்பாடு பற்றிப் பலரும் தவறான கருத்தே கொண்டிருக்கிறார்கள். அது அழிவுதரும் அடக்குமுறை

     சம்பந்தப்பட்டதல்ல; ஆக்கபூர்வமான வெளிப்பாடு அது. தன்னைக் கட்டுப்படுத்த வல்லவன் அவனது

     வல்லமைக்கேற்ற அறிவையும் ஆனந்தத்தையும் பெறுவான்.

      தனது எண்ணங்களையும் செயல்களையும் தன் விலங்கு உணர்வுகளுக்கு இரையாக்கி விடுகிறவன்

     கேடுகெட்ட முட்டாளாகிறான். தன்னைக் கட்டுப்டுத்திக் கொள்பவனே தன் வாழ்வையும் கட்டுப்படுத்திக்

     கொள்வான். அவன் விதியை அவனே வகுத்துக் கொள்வான். செல்லுமிடமெங்கும் மகழ்ச்சியை எடுத்துச்

     சென்று ஒரு செல்வமாய்ப் பெற்று மகிழ்வான் அவன்.

     துறத்தலால் விளைவது ஆக்கம். வீணடித்தலிலும் உற்சாகத்திலும் நிரந்தர மகிழ்ச்சியடைபவர்கள்,

     மதிப்பற்ற மகிழ்ச்சிகளை உதறித் தள்ளிவிட வேண்டும். இல்லாவிட்டால் வாழ்வின் எதிர்ப்பகுதியைத்தான்

     சந்திக்க வேண்டி நேரும்.  எனவே, இதற்கு மாறான சுய கட்டுப்பாட்டைக் கைக் கொள்க!