நகைச்சுவை   

 

கொஞ்சம் சிரிக்கலாம், வாங்க!

பதிப்பு 1

ஒருவர்;  நாட்டுல மக்களிடம் இப்பவெல்லாம் விழிப்புணர்ச்சி வளர்ந்துட்டுதுங்க.

மற்றவர்; எதை வச்சி சொல்றீங்க? தேர்தல் முடிவை வச்சா?

ஓருவர்:  இல்லீங்க. முன்ன மாதிரி ஈஸியா யார்கிட்டயும் கைமாத்து வாங்க முடியலையே... அதுதான்!

*****************

நண்பன் 1 : எங்கப்பாவுக்குப் பால் வியாபாரம் கைகொடுக்காததால் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணிட்டார்.

நண்பன் 2 : மறுபடியும் கறக்கற தொழில்தானா?

----------------------

பெண் 1 : காலமே மாறிப் போச்சுடி! அந்தக் காலத்துல எலிக்காகப் பொறி வைப்பாங்களாம்! இப்ப பொறிக்காக எலி வைக்கிறாங்க!

பெண் 2 : எதை வச்சு சொல்றே?

பெண் 1 : கணிப் 'பொறி'க்காக 'மவுஸ்' வைக்கிறாங்களே!

..........................

ஒருவர் ; அவர் ஒரு மகா கஞ்ச பிரபு!

மற்றவர் : அப்படியா ... எப்படி சொல்றீங்க?

ஓருவர் : தீயணைப்பு நிலையத்துக்குக்கூட 'மிஸ்டு கால்'தான் குடுக்குறார்னா பார்த்துக்குங்களேன்!

****************

திருடன் : (சிறுவனிடம்) தம்பி உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்டுல நகைகளை எங்கே வைப்பாங்க சொல்லு...

சிறுவன் : அடகுக் கடையிலே!

----------------------

ஜோதிடர் : உங்க ஜாதகப்படி இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க... அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.

வந்தவர் : எது பல்லா?

.........................

நோயாளி : என்ன டாக்டர் இது. மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்குப் பின் அப்படினு போட்டிருக்கீங்க..

டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க ! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.

+++++++++++++

நிருபர் : உங்கள் வயது என்ன?

நடிகை : 25

நிருபர் : இதையேதான் 15 ஆண்டுகளாக சொல்லி வருகிறீர்கள்.

நடிகை : என்னிடம் அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு கிடையாது.

***************

டாக்டர் : ஆப்பரேஷனுக்குப் பிறகு நீங்கள் ஒரு புதிய மனிதராக இருப்பீர்கள்.

நோயாளி :  மருத்துவ 'பில்'லை அந்தப் பழைய மனிதருக்கே அனுப்பிவிடுங்கள்!

++++++++++++

ஆசிரியை : உன்னிடம் ஒரு வெள்ளி இருக்கிறது என்று வைத்துக்கொள். இன்னும் ஒரு வெள்ளியை உன் தகப்பனாரிடம் கேட்டாய். இப்போது உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கும்?

மாணவன் : ஒரு வெள்ளி.

ஆசிரியை : உனக்கு கணக்கு தெரியவில்லையே!

மாணவன் : உங்களுக்கு என் தகப்பனாரைப் பற்றி தெரியாதே.

******************

ஆசிரியர் : 1809-ஆம் ஆண்டு என்ன நடந்தது?

கணேசன் : ஆபிரகாம் லிங்கன் பிறந்தார்.

ஆசிரியர் : சரி, 1812-ஆம் ஆண்டு நிகழ்ந்தது என்ன?

கணேசன் : அவருக்கு மூன்று வயதாகியது.

------------------------

ஆசிரியை ; முதலாவது அமரிக்க ஜனாதிபதிக்குப் பிறகு  பதவியேற்றவர் யார்?

மாணவன் : இரண்டாவது ஜனாதிபதி.

******************

மகன் : அப்பா, கல்யாணம் செய்துகொள்ள எவ்வளவு செலவாகும்?

தகப்பனார் ; எனக்கு சரியாகத் தெரியவில்லை, மகனே. நான் இன்னும் செலவழித்துக் கொண்டுதானிருக்கிறேன்!